இயற்கை முறையில் கத்திரி சாகுபடி

N. Madhubalan
February 1, 2021
Public Endorsement

இன்றுடன் இந்த கத்தரிச் செடி 52 நாட்கள் ஆகிவிட்டன

இயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்வதற்கு பயப்படும் விவசாயிகளிடையே சக்தி என்ற விவசாயி ஒரு தனித்தன்மையோடு விளங்குகிறார்.


காரணம் ஒரு சொட்டு மருந்து இல்லாமல் ரசாயன உரம் இல்லாமல் இயற்கை உரங்களைக் கொண்டு மிக அழகாக தர்மபுரிக்கு அருகில் ,வருவான் வடிவேலன் கல்லூரிக்கு பின்புறம் இருக்கும் இவரது தோட்டத்தில் இயற்கை முறையில் கத்தரிச் செடி பூக்களுடன் மிக சிறந்ததாக விளங்குகிறது. தோட்டத்திற்கு தேவையான விளக்கு பொறி இவரே தயார் செய்து மிக குறைந்த செலவில் வைத்திருக்கிறார்.


மேலும்கத்திரியில் வரும் வேரழுகல் பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்த இவர் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.


அதாவது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசலுடன் ஒரு லிட்டர் கோமியம் எடுத்துக்கொண்டு இதனை சரி பங்காக ஆக்கிக்கொண்டு கத்தரிச் செடியின் வேரைச் சுற்றி 200ml ஊட்டி விடுகிறார்.

இதன் மூலம் வேர் அழுகல் நோய் இவரது செடியை அண்ட வில்லை என்று ஆணித்தரமாக கூறுகிறார் .

இதனால் தனது தோட்டத்தில் வேரழுகல் பூஞ்சான நோய் எதுவுமே இல்லை என்று கூறுகிறார் .

கத்தரிக்கு குறைந்தபட்சம் 8 மருந்துகள் ஆவது அடிப்பார்கள் ,அதற்கு சுமார் ஒரு ஏக்கருக்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை செலவு பிடிக்கும் ,ஆனால் நானே இயற்கை முறையில் மதுபாலன் சார் ஆலோசனையில் ,பஞ்சகாவியா | தேமோர் கரைசல், அமுத கரைசல் |கற்பூர கரைசல் | 3ஜி கரைசல் | மீன் அமிலம்,தயார் செய்து எப்பொழுதும் ரெடியாகவே எனது தோட்டத்தில் வைத்திருக்கிறேன் என்கிறார்.


நேற்று இவரது தோட்டத்திற்குச் சென்று, கத்தரி செடியில் இருக்கும் பூக்கள் நிலைத்து இருப்பதற்கு, கீழ்க்கண்ட ஆலோசனைகளை தெரிவித்தேன்.

ஒன்று மீன் அமிலம் தரை வழியாகவும், தெளிப்பான் மூலம் கொடுக்க சொல்லி இருக்கிறேன். ஐந்து நாட்கள் கழித்து தேமோர் கரைசல் அத்துடன் பெருங்காயத்தை கலந்து தெளிக்க சொல்லியிருக்கிறேன்  .

அதன்பின்பு பே விரியா பேசியானா என்னும் திரவத்தை 10 லீட்டர் தண்ணீர்க்கு50 எம்எல் கலந்து செடி முழுவதும் நனையுமாறு அடிக்கச் சொல்லி இருக்கிறேன். ஏனென்றால் காய் புழுக்கள் வரக்கூடிய சமயம் .

அடுத்தபடியாக பஞ்சகாவியா வை லிட்டருக்கு 30 மில்லி என்ற விகிதத்தில் கலந்து செடி நனையுமாறு கொடுக்க சொல்லி இருக்கிறேன்.

இப்படி 15 நாட்களுக்கு கத்திரி செடிக்கு செய்ய வேண்டிய வேலைகளை அட்டவணைப்படுத்தி கொடுத்து உள்ளேன் .


மேலும் மஞ்சள் வண்ண அட்டையை ஏக்கருக்கு 10 முதல் 15 அட்டைகளை வாங்கி வைக்கச் சொல்லி இருக்கிறேன் .

இவை அனைத்தும் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்துவிடும்.

காய் இன்னும் பத்து பதினைந்து நாட்களில் திரட்சியாக வந்துவிடும்.

மாலைப் பொழுதில் இவரது நிலத்திற்கு நானும் எனது துணைவியாரும் சென்று இயற்கை வேளாண்மை பற்றி உரையாடி குடும்பத்துடன் சந்தோசமாக கழித்தது. மிகவும் மனதிற்கு உற்சாகத்தைத் தருகிறது இந்த இயற்கை விவசாயத்தை செய்யும்திரு சக்தி தொடர்பு கொள்ள 994333 6614.

Share your Comments :

RECOMMENDED ARTICLES :

LIVING WITH FRAGRANCE

The rates of each plant is mentioned there itself. We tI have presented a visual site of the nursery gardenbecause our imagination is not enough to know its value.

READ MORE ->
இயற்கை விவசாயிகளுடன் பேசும் வாய்ப்பு

நாளை இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் செய்த மகத்தான பணியினை உங்களிடம் சொல்கிறேன்..........

READ MORE ->
Simple Technique to make your desi-rose plant to bloom more

Similarly if you want to add nutrients to rose plant it is important that you stir the soil well before adding

READ MORE ->
மண்ணை வளமாக்கும் தாவரங்கள்

மண்ணை வளமாக்கும் தாவரங்கள்....மணிசத்தை கரைத்து தரும் பயிர்கள் .....

READ MORE ->
கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை

மருந்து தெளிக்காமல் இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தி குறைந்த வரும் கத்திரி சாகுபடியை அதிகரிக்க வேண்டும்.

READ MORE ->
உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும்முறை*

வாடல் நோய் இலைகருகல்நோய் வேர் அழுகல் நோயை தடுக்கும் சூடோமோனஸ் உயிர்

READ MORE ->
TOUCH WITH ANIMALS - GERMANY

Knowledge about the animals has to be started from the young age .

READ MORE ->
Peanut oil cake - Crop growth regulator

best crop growth regulator now can easily prepare at home

READ MORE ->
தென்னை பராமரிப்பு கவனிக்க வேண்டியவை

ஒவ்வொரு மாதமும் அல்லது 45 நாட்களுக்கு ஒரு முறை காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன்வண்டு காண பராமரிப்புகளை செய்வது நல்லது.

READ MORE ->
Drip water Irrigation - Episode 5

அதன் நடுவில் தற்போது வீட்டில் இருப்பதால் எனது மாடி தோட்டத்தில் இருந்து யூடியூப் மூலம் செய்திகளை நண்பர்களுக்கு சொல்லலாம் என்று ,நான்கு வீடியோ எடுத்து,ஆர் எஸ் ஆர் மீடியா துணையுடன் வெளியிட்டு இருக்கிறேன்.

READ MORE ->
Next
1 / 5
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.
Subscribe Us to get more chance to interact in
Webinar
Join