தர்மபுரி மாவட்டத்தில் வி கொல்ல அல்லி என்ற கிராமத்தில் இயற்கை விவசாயத்தில் தக்காளி சாகுபடி செய்திருக்கும் திரு. சரவணன் அவரது நண்பரான இயற்கை விவசாயத்தில்அதுவும் குறிப்பாக நெல் விவசாயத்தில் சக்கை போடு போடும் திரு. கருணாநிதி மற்றும் மொரப்பூர் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயிகளுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அதுவும் குறிப்பாக தக்காளி சாகுபடியில் பூச்சி கட்டுப்பாட்டை பற்றி எடுத்துச் சொன்னேன்.
சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளை செடிகளின் சாற்றை தயார் செய்து, தக்காளி செடி மீது தெளித்தால் எல்லாவிதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பூ உதிர்தலையும் குறைக்கலாம்.

20மிலி காகித பூ இலைச் சாற்றில் ஒரு லிட்டர் நீர் கலந்து தக்காளி விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் நாற்றாங்காலில் நாற்று அழுகல் நோய் வராது.
பூ உதிர்தலை குறைக்க, வேப்பம் எண்ணெயை தெளிக்கலாம். அல்லதுதேமோர் கரைசல் அடிக்கலாம் செண்டுமல்லி செடியை தக்காளி தோட்டதததைச் சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.

காய் துளைப்பானை தடுக்க, பூண்டு அல்லது வெங்காய செடியை வரப்பு பயிராக நடவு செய்தல் வேண்டும் வேப்பம் புண்ணாக்கு உடன் ஆட்டுப் புழுக்கையை கலந்து வயலில் இட்டால் இலைப்பேன் தாக்கம் கட்டுப்படும் காலை வேளையில் சாம்பலைத் தக்காளிச் செடிக்குத் தூவினால் இலைப்பேன் மற்றும் அசுவினி தாக்குதல் கட்டுபடுத்த சர்வோதய சோப் கரைசலை இலைகளின் மீது தெளித்தால், மாவுப் பூச்சியின் முட்டை மீது படிந்து இறந்து விடும்.

கற்பூர கரைசல் /காய் சிறிது வந்தவுடன் ஒரு டேங்குக்கு 30 எம்எல் என்ற அளவில் கலந்து செடி நனையுமாறு நன்கு அடிக்க வேண்டும். நான் முதன் முதலில் பணியாற்றிய மொரப்பூர் பகுதியில் இருந்து வந்திருந்த விவசாயிகளுடன் பேசுவது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
நாளை இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் செய்த மகத்தான பணியினை உங்களிடம் சொல்கிறேன்..........
Share your Comments :