கவாத்து செய்வதன் மூலம் அதிகப்படியான மகசூல்..!!

N. Madhubalan
December 11, 2020
தமிழ் வேளாண்மை வலைப்பதிவு

கவாத்து செய்வதன் முக்கியத்துவம் !

கவாத்து என்பது அதிகமாக உள்ள பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குப்படுத்தும் முறையாகும்.

 

இதை செய்வதன் மூலம் புதிதாக கிளைகள் மற்றும் பூ மொட்டுகளை துளிர்க்கச்செய்ய முடியும். 

 

இதனால் அதிக அளவில் புதிய கனிகள் மற்றும் மலர்களை தருவிக்க முடியும். 

 

பொதுவாக கவாத்து செய்யவில்லை என்றால் மரம், செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.

 

கவாத்து செய்வதன் மூலம் அதிகப்படியான மகசூலும் முழுமையாக கிடைக்கின்றன.

 

கவாத்து செய்யப்படும் மரங்கள் :

 

மாமரம், கொய்யா, மாதுளை, தேயிலை, அழகுச் செடிகள் மற்றும் பல மரங்களுக்கு பக்க கிளையைத் தோற்றுவிக்க கவாத்து செய்யப்படுகிறது.

 

சில மரவகைகளை நாம் முழுவதும் கவாத்து செய்யலாம். உதாரணத்திற்கு முருங்கை மரம்.

 

முருங்கை மரம் முழுவதும் கவாத்து செய்யப்பட்டாலும் உடனடியாக நன்றாக வளர்ந்துவிடும்.

 

ஆனால் சில வகை மரங்களில் நாம் குறிப்பிட்ட அளவு மட்டுமே கவாத்து செய்ய வேண்டும்

 

கவாத்து செய்வது எப்படி?

 

கவாத்து பூவெடுக்கும் தருணங்களில் பார்த்து செய்ய வேண்டும். இல்லையென்றால் மரம் பட்டு போக வாய்ப்பு உள்ளது. 

 

செப்டம்பர் மாதத்தில் கவாத்து முக்கியம்.

 

முதலில் தேவை இல்லாத கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.

 

அதன் பிறகு தேவையான அளவு கிளைகளை விட்டுவிட்டு நன்றாக காற்றோட்ட வசதி ஏற்படுமாறு கவாத்து செய்ய வேண்டும்.

 

கவாத்து செய்தவுடன் வெட்டுப்பாகத்தில் குப்பைமேனிக் கலவை அல்லது பசுஞ்சாணத்தைத் தடவி வைக்க வேண்டும்.

 

முறையாக கவாத்து இல்லாத மரங்களில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும்.

 

மரத்தின் வயது, தாங்கும் திறன், ரகம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு கவாத்து செய்ய வேண்டும்.

 

எப்போது கவாத்து செய்யக்கூடாது?

 

மரம் அல்லது செடி நோய் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும் போது செய்யக்கூடாது. 

 

போதுமான அளவு நீர் இல்லாத சமயங்களில் செய்யக்கூடாது.

 

பருவ காலங்களில் பூ வைத்த பிறகு கவாத்து செய்யக்கூடாது.

 

பூ வைப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பு செய்யக்கூடாது. ஏனெனில் அப்படி செய்யும் போது அதிக அளவில் மீண்டும் தேவையற்ற கிளைகள் வளர்ந்துவிடும்.

 

கவாத்து செய்யும் போது அதிக கிளைகளை வெட்டி விடக்கூடாது.

 

நன்மைகள் : 

 

கவாத்து செய்வதினால் தேவையற்ற கிளைகளை அப்புறப்படுத்தி முழு ஊட்டச்சத்துகளையும் வீணாக்காமல் பயிர்களுக்கு அளிக்கமுடிகிறது.

 

அதனால் செடி மற்றும் மரங்களிடையே நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுகிறது.

 

இதை செய்வதன் மூலம் மகரந்த சேர்க்கை எளிதாகவும் அதிகமாகவும் நடைபெற்று மகசூல் அதிகரிக்கப்படும்.

 

கவாத்து செய்யப்பட்டு நீக்கப்பட்ட கிளைகள் மற்றும் இலைகளை நாம் மக்க வைத்து இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம்.

 

ஏனெனில் ஒரு மரம் அல்லது செடி தனக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை அதன் பாகங்களில் சேகரித்து வைத்திருக்கும். 

 

நாம் கவாத்து செய்யப்பட்ட கிளை மற்றும் இலைகளை அப்புறப்படுத்தினால் ஊட்டச்சத்துக்கள் வீணாகும் நிலை ஏற்படும்.

 

கவாத்து செய்ய தேவையான கருவி :

 

கவாத்து செய்வதற்கான கத்திரிக்கோல்கள் கடைகளில் கிடைக்கின்றன.

 

அந்தக் கத்திரியில்தான் கவாத்து செய்ய வேண்டும். அரிவாளைப் பயன்படுத்தக்கூடாது.

Share your Comments :

RECOMMENDED ARTICLES :

ஹியூமிக் அமிலம் - முக்கிய பயனே ரசாயன உரத்தின் பாதிப்பை குறைப்பதே

ஹியூமிக் அமிலம் சந்தையில் உள்ள அனைத்து அங்கக உரக்கடைகளிலும் கிடைக்கிறது. 

READ MORE ->
உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயிருக்கு பயன்படுத்தும் அளவுகள்

காய்கனி பயிரில் இருக்கும் பழ வண்டு மற்றும் முருங்கையில் இருக்கும் பழவண்டுகளை கவர்ந்து கட்டுப்படுத்தும்‍

READ MORE ->
பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறை

சில பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. எ.கா: எள், கடலை. எனவே இப்பயிர்களை பயிரிட்டபின் பயறு வகைகளைப் பயிரிட்டால் அவை சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.

READ MORE ->
different varieties of herbs in a 450 square feet terrace garden.

I planted a few pieces of the cane fruit into my plant bed, and within seven months, more than six to seven full-grown shoots were ready for harvest.

READ MORE ->
காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த

ஒரு மண் சட்டியில் பற்ற வைத்த கரியைப் போட்டு சாம்பிராணி பொடியை அதில் தூவி புகைமூட்டம் போட வேண்டும்.

READ MORE ->
பயிர்பாதுகாப்பு செய்ய உதவும் சீத்தா (PEST CONTROL BY CUSTARD APPLE)

.இதன் எண்ணெய்க் கரைசலை தெளித்து நெல் புகையான் பூச்சிகளைக் கட்டுப் படுத்தலாம்.

READ MORE ->
Webinar - how to make cultivating farm?

Aug 16th ..next webinar.. with our spl guest Mrs. Priya vardeesh

READ MORE ->
கொய்யா சாகுபடியில் விவசாயின் அனுபவம்

ஒரு கிலோ விலை ரூபாய் 30 என்று விற்றால் ஒரு மரத்துக்கு 800 ரூபாய் கிடைக்கும் (செலவு ஒரு மரத்துக்கு 100 ரூபாய் வரும்) - 500 மரத்துக்கும் மூன்று லட்சம் வருமானம் கிடைக்கும் செலவு போக நமக்கு நல்ல லாபம் தான்.

READ MORE ->
இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் நடவு மற்றும் மருதாம்பு கரும்பு பயிர் செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை

இந்த நாட்களுக்கு இடையில்நீர் பாய்ச்சும் போதும் அமிர்தக்கரைசல் தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்கலாம்.

READ MORE ->
ஆட்டு எரு-விவசாயியுடன் சந்திப்பு

உங்கள் பகுதியில் இவ்வளவு விலைக்கு விற்கிறார்களா?

READ MORE ->
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.
Subscribe Us to get more chance to interact in
Webinar
Join