ஆட்டு எரு-விவசாயியுடன் சந்திப்பு

N. Madhubalan
January 27, 2021
தமிழ் வேளாண்மை வலைப்பதிவு

நேற்று கிராமத்தை நோக்கி செல்லும்பொழுது, இந்த சந்திப்பு நடந்தது.

இயற்கை உரம் என்றதும் நினைவுக்கு வருவது, மாட்டு சாணம்தான். மாட்டு சாணத்தை விட சத்து மிக்கதும், விளைச்சலை கூட்டுவதுமான ஒரு உரம் உண்டென்றால், அது ஆட்டு எரு தான். ஆட்டு சாணத்தில் நிறைந்துள்ள சத்துக்கள், உள்ளது.

:ஆட்டு எருவில் மாட்டு எருவில் உள்ளதைப் போல், 2 மடங்கு தழைச்சத்தும் சாம்பல் சத்தும் உள்ளது. ஒரு ஆடு ஒரு வருடத்துக்கு, 500 கிலோ முதல், 750 கிலோ வரை எரு உற்பத்தி செய்ய வல்லது. 100 ஆடுகள் உள்ள கிடை வைத்தால், ஒரு ஏக்கருக்கு வேண்டிய வளத்தைப் பெறலாம்.ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும். ஆடுகளுக்கு புரதச்சத்து குறைந்த தீவனங்களை அளிக்கும்போது, எருவில் தழைச்சத்து அளவு குறைந்தே இருக்கும். ஆட்டின் சிறுநீரில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

புழுக்கையில் நுண்ணூட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் உள்ளன. எனவே புரதச்சத்து மிக்க தீவனங்களான குதிரைமசால், முயல்மசால், வேலிமசால், சூபாபுல், தட்டைப்பயறு போன்றவற்றை, ஆடுகளுக்கு கொடுத்தால் தழைச்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவு, ஆட்டு எருவில் அதிகமாக இருக்கும். ஆட்டு எருவில், 60 முதல் 70 சதவீதம் தண்ணீர் சத்தும், 2 சதவீதம் தழைச்சத்தும், 0.4 சதவீதம் மணிச்சத்தும், 1.7 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளன.

ஆழ்கூள முறை உர உற்பத்திஇம்முறையில் கொட்டகையின் நிலப்பரப்புக்கு, ஆழ்கூளமாக நிலக்கடலைத் தோல், துண்டிக்கப்பட்ட வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்கழிவு போன்றவற்றை பயன்படுத்தலாம்.

 ஆடுகளுக்கு நல்ல ஊட்டச்சத்து மிக்க பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம், தண்ணீர் தேவைக்கேற்ப கொடுப்பதால், ஆடுகள் நன்கு உட்கொண்டு, அதிக புழுக்கை மற்றும் சிறுநீரை வெளியேற்றுகிறது.

ஆழ்கூளத்திலுள்ள ஈரத்தன்மையைப் பொறுத்து, 3 முதல் 4 வருடத்துக்கு ஒரு முறை, ஆழ்கூள எருவை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த முறையில் பத்து ஆடுகளிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு, இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இந்த எருவில், 50 கிலோ பொட்டாஷ் உரத்திலுள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும். ஆட்டு எருவில் உள்ள தழைச்சத்து, மெதுவாக வெளிப்படுவதால் பயிர்களின் தேவைக்கேற்ப, தழைச்சத்து சீராக கிடைக்கிறது.

வீடுகளில் மண் தொட்டி மற்றும் பாலித்தீன் பைகளில், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள், இந்த ஆழ்கூள எருவை பயன்படுத்தி, களைகளற்ற நாற்றங்கால் அமைத்து, நல்ல தரமான கன்றுகளை உற்பத்தி செய்யலாம். ஆழ்கூள உரத்தை தென்னை, வாழை, தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற பயிர்களின் நாற்றங்காலில் இட்டு, களைகளின் அளவைக் கட்டுப்படுத்தி அதிக லாபம் பெறலாம்.

இவரிடம் பேசும்பொழுது, 1 டன் ஆட்டு உரம்

ரூ 8000/ வரை விற்பனை செய்யப்படுகிறது, என்றார்.விலை  அதிகமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

உங்கள் பகுதியில் இவ்வளவு விலைக்கு விற்கிறார்களா?

Share your Comments :

RECOMMENDED ARTICLES :

Drip water Irrigation poster

poster for our episode 5 is released by roadside romeos...Get Ready for our next Video about * Drip water Irrigation * in terrace garden.

READ MORE ->
வெங்காயம் பூச்சி கொல்லி...

இது சிறந்த பூச்சி கொல்லி.

READ MORE ->
NO MARKET ACCESS TO ORGANIC FARMERS IF NOT CERTIFIED

Only “small original producer or producer organisation” who market their produce through direct sales as determined by FSSAI will be exempted from the conditions in the notification.

READ MORE ->
எனது ஆலோசனையின் முடிவு

madhubalan sir நீங்கள் கூறியது போல் செய்ததில் ...........விவசாயியிடமிருந்து இதுபோன்ற செய்தியைக் கேட்டபின்......

READ MORE ->
சாமாந்தி பூ சாகுபடி

இந்நிலையில் பணம் பற்றாக்குறையால் கடந்த ஒரு மாதமாக பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளது.

READ MORE ->
இயற்கை வேளாண்மை

இயற்கை-கரிம வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பயிா்களின் சுகாதாரம், செயற்கை உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், களை, பூச்சி-நோய் கொல்லிகளைத் தவிா்த்தல்

READ MORE ->
Simple Technique to make your desi-rose plant to bloom more

Similarly if you want to add nutrients to rose plant it is important that you stir the soil well before adding

READ MORE ->
சிறு குறு சான்றிதழ் வாங்குவதற்கு எவ்வளவு நிலத்திற்குள் இருக்க வேண்டும்

சிறு விவசாயி சான்று பெற ஒரு ஹெக்டேர் அதாவது 2ஏக்கர் 47 சென்ட் இருக்க வேண்டும். குறு விவசாயி சான்று பெற 0.80.00ஹெக்டர் அதாவது 2.00ஏக்கருக்குள் இருக்க வேண்டும்.

READ MORE ->
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.
Subscribe Us to get more chance to interact in
Webinar
Join