சிக்கிம் வான் மூலம் செல்வதற்காக பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து   ,

மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படலாம். நாங்கள் 20 பேர் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டோம்.

மற்ற 20 பேர் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்கள். பெங்களூர் விமான நிலைத்தில் அதிகாலை 5 மணி அளவில் Bagdograவிமான நிலையத்திற்கு செல்ல விமானம் இருக்கிறது . இந்த விமான நிலையம் மேற்கு வங்காளத்தில் இருக்கிறது.

அதே சமயத்தில் சென்னையிலிருந்து அதிகாலை 5.50க்கு செல்ல விமானம் இருக்கிறது மொத்த பயண நேரம் இரண்டு மணி 40 நிமிடங்கள்நாங்கள் அனைவரும் Bagdograவிமான நிலையத்தில் ஒன்றுசேர்ந்து அங்கிருந்து கேங்டாக் செல்ல மலைமேல் ஏற தயாரானோம் .

கேங்டாக் சிக்கிமின் தலைநகரம். Bagdograவிலிருந்து கேங்டாக் செல்ல மொத்தம் நாலரை மணி நேரம் ஆகும்.

மலைமேல் செங்குத்தாக ஏறவேண்டும் பயணம் மிகவும் களிப்பூட்டும் தாக இருக்கும்

இரு மருங்கிலும் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கும்

ஐந்து மணி நேரம் கழித்து கேங்டாக் தலை நகரை அடைந்தோம் .நாங்கள் செல்லும் பொழுது அங்கு வெப்பநிலை 13 டிகிரி .

உள்ளூர் மக்களால் 'சொர்கம்' என அழைக்கப்படும் அற்புதமான இயற்கை காட்சிகள் நிறைந்த, பனிகளால் சூழப்பட்ட சிகரங்களைக் கொண்ட, பூக்களால் நிறப்பப்பட்ட புல்வெளிகளுடன் காட்சியளிக்கும், பரிசுத்தமான நீரால் நிரப்பப்பட்ட நீர்நிலைகள் உள்ள இடத்திற்கு பயணித்தால் ஏற்படும் ஆனந்தத்தை அளவிடவா முடியும்?

இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற அழகான இடம் எதுவாக இருக்கும்? சில வார்த்தைகளில் வர்ணித்தாலே இவ்வளவு அற்புதமாகத் தெரியும் அந்த இடம் எதுவாக இருக்கும்? ஆம்! நாம் 'சிக்கிம்' என்ற இடத்தைப் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இமயமலைகளுக்கிடையே இயற்கையின் ஆசீர்வாதத்துடன் அமைந்திருக்கிறது சிக்கிம் மாநிலம். சிக்கிம் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்த்தே ஆகவேண்டிய அளவிற்கு அழகு நிறைந்தவை. சிக்கிம் மாநிலம் பெருமைப்படத்தக்க பல தனிச்சிறப்புகளை உடையதாகும்.

வாருங்கள், அதிகம் அறியப்படாத இந்த மலை மாநிலமான சிக்கிமைப் பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

சிக்கிம் மாநிலத்தின் புவியியல் அமைப்பு

சிக்கிம் இமயமலைகளுக்கு நடுவே அமைந்துள்ள மலைசார்ந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் பெரும்பாலான நகரங்கள் கடல் மட்டத்தில் இருந்து 280மீ முதல் 8585மீ உயரம் வரை அமைந்துள்ள மலைப்பகுதிகளாகவே இருக்கின்றன.

உலகின் 3-வது உயரமான சிகரமான கஞ்சஞ்ஜங்கா இங்கு அமைந்துள்ளது. கிழக்கில் பூட்டானையும், மேற்கில் நேபாளத்தையும், வடக்கே திபெத்தையும் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது சிக்கிம்.

ஏறத்தாழ 28 மலைச் சிகரங்களும், 227 அதிக ஆழமாக ஏரிகளும், 80 பனி மலைகளும் சிக்கிமில் இருக்கின்றன. மேலும் தனிச்சிறப்பாக சிக்கிமில் 100 நதிகளும், சில சிறிய நதிகளும், சுடுநீர் ஊற்றுகளும் அமைந்துள்ளன. இயற்கையான 50 டிகிரி சூட்டில் இருக்கும் வெந்நீர் ஊற்றுகளுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

சிக்கிமின் மூன்றில் ஒரு பகுதி அடர்ந்த காடுகளாக உள்ளது. மேலும் பனிகளால் நிரம்பிய பல ஓடைகள் சிக்கிமின் உயிர்நாடி என அழைக்கப்படும் தீஸ்தா நதியில் சங்கமிக்கின்றன.

வானிலை

சிக்கிமின் வானிலை அம்மாநிலத்தைப் போலவே அருமையாக விளங்குகிறது. வருடம் முழுவதும் சீரான பனிப்பொழிவு பெறும் இந்தியாவின் வெகு சில மாநிலங்களில் சிக்கிமும் ஒன்று என்றாலும், இம்மாநில மக்கள் வருடம் முழுவதும் மிதமான வானிலையையே அனுபவிக்கிறார்கள்.

வட பகுதி பனியுறைநிலமாக இருக்கும் அதே சமயம் தென்பகுதி மிதமான வானிலையுடன் விளங்குகிறது. தட்பவெட்ப நிலை 0 டிகிரி வரை செல்லும்போதெல்லாம் வடப் பகுதி உறைந்து உறைநிலமாக நான்கு மாதங்கள் வரை நீடிக்கிறது.

சிக்கிமில் நிலவும் மிதமான வானிலைக்கு முக்கியமான காரணம் கோடை காலங்களில் தட்பவப்பம் 28 டிகிரிக்கு மிகாமலும், குளிர்காலத்தில் 0 டிகிரிக்கு குறையாமலும் இருப்பதுதான். மழைக்காலங்கள் பலமான மழை பெய்வதால் அடிக்கடி ஆபத்தான மணற்சரிவுகள் ஏற்படுவதுண்டு.

காலை 10 மணி அளவில் நாங்கள் 40 பேரும் ஐ சி ஏ ஆர் ஏற்பாடு செய்திருந்த விவசாய பயிற்சியில் கலந்து கொண்டோம் .

மற்றும் அவர்களது செயல்முறை தோட்டங்களையும் பார்வையிட்டோம். அப்படி பார்வையிடும்போது நாங்கள் ஒரு விவசாயி சந்தித்தோம் ஆச்சரியமாக இருந்தது இப்படியும்

ஒரு மனிதர்

சிக்கிம் சுற்றுலாவின் மூன்றாவது பகுதி இங்கு ஆர்கானிக் விவசாயம் இஞ்சி ஏலக்காய் காய்கறிகள் போன்றவைகளுக்கு மட்டும் ஆர்கானிக் விவசாயம் செய்யப்படுகிறது அதிலும் இஞ்சி உலக அளவில் மதிப்பைப் பெற்றது .

அத்தகைய விவசாயிகளை நேரில் சென்று பார்த்தோம்


சிக்கிம் மாநிலத்தில் நமது தமிழர் ஒருவர் விவசாயிகளின் உற்ற நண்பராகவும் இந்த மாநிலத்திற்கு ஆர்கானிக் விவசாயம் ஏற்பட காரணகர்த்தாவாக இருந்தவர் இவர்தான்.

இவர் மதுரைக்காரர் .

திரு அன்பழகன் IFS அதிகாரி.

வேளாண்மை படிப்பை முடித்து ஐஏஎஸ் பரிட்சை எழுதி சிக்கிமில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

மிகவும் எளிமையான நண்பர்.

எங்களது வரவை அன்புடன் வரவேற்று அந்த மாநிலத்தை பற்றி அனைத்தும் கூறினார்.

எங்களிடம் ஒரு மூன்று மணி நேரம் இயற்கை வேளாண்மை பற்றி மிகத் தெளிவான கருத்துடன் எடுத்துரைத்தார்.


Share your Comments :

RECOMMENDED ARTICLES :

LIVING WITH FRAGRANCE

The rates of each plant is mentioned there itself. We tI have presented a visual site of the nursery gardenbecause our imagination is not enough to know its value.

READ MORE ->
இயற்கை விவசாயிகளுடன் பேசும் வாய்ப்பு

நாளை இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் செய்த மகத்தான பணியினை உங்களிடம் சொல்கிறேன்..........

READ MORE ->
Simple Technique to make your desi-rose plant to bloom more

Similarly if you want to add nutrients to rose plant it is important that you stir the soil well before adding

READ MORE ->
மண்ணை வளமாக்கும் தாவரங்கள்

மண்ணை வளமாக்கும் தாவரங்கள்....மணிசத்தை கரைத்து தரும் பயிர்கள் .....

READ MORE ->
கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை

மருந்து தெளிக்காமல் இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தி குறைந்த வரும் கத்திரி சாகுபடியை அதிகரிக்க வேண்டும்.

READ MORE ->
உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும்முறை*

வாடல் நோய் இலைகருகல்நோய் வேர் அழுகல் நோயை தடுக்கும் சூடோமோனஸ் உயிர்

READ MORE ->
TOUCH WITH ANIMALS - GERMANY

Knowledge about the animals has to be started from the young age .

READ MORE ->
Peanut oil cake - Crop growth regulator

best crop growth regulator now can easily prepare at home

READ MORE ->
தென்னை பராமரிப்பு கவனிக்க வேண்டியவை

ஒவ்வொரு மாதமும் அல்லது 45 நாட்களுக்கு ஒரு முறை காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன்வண்டு காண பராமரிப்புகளை செய்வது நல்லது.

READ MORE ->
Drip water Irrigation - Episode 5

அதன் நடுவில் தற்போது வீட்டில் இருப்பதால் எனது மாடி தோட்டத்தில் இருந்து யூடியூப் மூலம் செய்திகளை நண்பர்களுக்கு சொல்லலாம் என்று ,நான்கு வீடியோ எடுத்து,ஆர் எஸ் ஆர் மீடியா துணையுடன் வெளியிட்டு இருக்கிறேன்.

READ MORE ->
Next
1 / 5
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.
Subscribe Us to get more chance to interact in
Webinar
Join