கேள்வியைக் கேளுங்கள்,  பதில்களைப் பெறுவீர்கள்
CLICK THE BUTTON BELOW TO ASK UR QUESTIONS
SEND UR QUESTIONS

Frequently asked questions

1. டேராஸ் கார்டன் (அ) மாடித் தோட்டம் என்றால் என்ன?

நம் வீட்டின் மாடியில் செடி, கோடி, பூ, காய் கனிகளை வளர்ப்பது....அது மொட்டை மாடியாகவோ,பால்கனியாகவோ, வீட்டின் மேற்கூரையாகவோ இருக்கலாம். முன்பு வீட்டை சுற்றியிருந்த தோட்டத்திற்கு இன்று இடம் இல்லாமல் போனதால் அதை மாடிக்கு மாற்றல் செய்துவிட்டோம். நிலம் வாங்கி பயிர் செய்யும் பிரச்சனைகளும் இதில் இல்லாதது இவற்றை வரவேற்கதக்கதாக மாற்றியுள்ளது.

2. மாடித் தோட்டம் எங்கு அமைக்கலாம்?

அடுக்குமாடி குடியிருப்புகள், தனி மாடி வீடுகள், அலுவலக வளாகங்கள், சேமிப்பு கிடங்குகள், மேலும் சில தொழிற்சாலைகளிலும் கூட அமைக்கலாம்.

3. டேராஸ் கார்டன் அமைப்பதற்கு முன் முக்கியமாக செய்ய வேண்டியவை என்ன?

மொட்டை மாடி என்பது ஒரு வீட்டின் கூரையாகும். அதனால் நீர் புக விடாதபடியான தகுந்த வாட்டர் ப்ரூப் கொண்டு தரையை நீர் கசிவு மற்றும் ஒழுகுதல் போன்றவற்றிலிருந்து காத்து கொண்டால் போதுமானது.

4.. செடிகளின் வேர்களால் தரைக்கோ அல்லது கட்டிடத்திற்கோ என்ன பாதிப்புகள் வரும்?

ஆணி வேர் கொண்ட செடிகள் (மரங்கள்) ஆபத்தானவை. அவை தங்களது ஷக்தியால்தரையை துளைக்கும் வல்லமை கொண்டவை.அதனால் ஜல்லி வேர் கொண்ட செடிகளே சிறந்தவை. அது போல காற்றினாலோ, பறவைகளாலோ விதைகள் நம் மண்ணில் விழுந்து வளர்ந்துவிடும் அவற்றை கவனமாக அகற்றி விட வேண்டும்.

5. எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?

 ஜனவரி:- (மார்கழி, தை)  - கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.
 பிப்ரவரி:- (தை,மாசி)  - கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.
 மார்ச்:- (மாசி, பங்குனி)  - வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.
 ஏப்ரல்:- (பங்குனி, சித்திரை) - செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.
 மே: (சித்திரை, வைகாசி)  - செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.
 ஜூன்:- (வைகாசி, ஆனி)  - கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.
 ஜூலை:-  (ஆனி, ஆடி) - மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.
 ஆகஸ்ட்: - (ஆடி, ஆவணி) - முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.
 செப்டம்பர்: - (ஆவணி, புரட்டாசி) -  செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.
 அக்டோபர்: - (புரட்டாசி, ஐப்பசி) - செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.
 நவம்பர்: - (ஐப்பசி, கார்த்திகை) - செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.
 டிசம்பர்:- (கார்த்திகை, மார்கழி) - கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய்  ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

6. மாடி தோட்டம் அமைக்கும் முன் செய்ய வேண்டியது ?

தேவையான பொருட்கள் சேகரித்து வைத்து கொள்ளவும்.             
  
 1 . GROW BAGS or thotti or செடி பை ,.மணல் ..தென்னை நார் கழிவு மககியது .. மண் புழு உரம் , செம்மண் , சுடோமொனஸ் ,டி.விரிடி , உயிர் உரங்கள் வேப்பம் புன்ன்னக்கு, பூவாளி, தெளிப்பான் , பஞ்சகவ்யா..               
 2. அடி குச்சிகள் , சரளை கல் பிளாஸ்டிக் கயிறு , கத்தரிக்கோல் வேப்ப எண்ணை (Azadiractin)            
 3. நாற்றுகள்- தக்காளி மிளகாய் கத்தரி முதலியவை , கீரை , கொடி வகை விதைகள் , பாகல், சுரை, பூசணி, பீர்க்கன். மலர் செடிகள் மல்லிகை, செம்பருத்தி, அரளி . ரோஜா ,          
 4. சொட்டு நீர் பாசனம் அமைக்க வசதி மற்றும் உபகரணம்           
 5. தண்ணீர் உள்ளே இறங்குவதை தடுக்க தரையில் வெள்ளை நிற white water proof paint தரையில் அடிக்கவும்.          
 6. செடி பை வைக்கும் முன் சிறு சரளை கல் சிறுது கொட்டி அதன் மேல் வைப்பதால் நன்மை உண்டு.

7. டேரஸ் கார்டனில் செடிகள் வைக்க எப்படி ஆரம்பிப்பது?

அது மிக மிக எளிது...

1) உங்களிடம் உள்ள ஒரு நல்ல தொட்டியோ, பானையோ, பால் போடும் கிரேடுகள் (முடிந்த அளவு புதியதை தேடாமல் பழையவற்றை மறு உபயோகம் செய்தால் குப்பைகளை குறைத்தும் கொள்ளலாம்) எடுத்துகொள்ளவும். அதில் அதிக படியான நீர் செல்ல ஒரு துவாரத்தை அமைத்து கொள்ளவும் .

2) இதில் மண், மக்கிய குப்பை, மணல் (அ) தேங்காய் நார் இவற்றுடன் மண் புழு உரம் அனைத்தையும் சம அளவில் எடுத்து கொள்ளவும்.

3) துவாரத்தை அடைத்து கொண்டு இந்த கலவையை நிரப்பியவுடன் தண்ணீர் ஊற்றி மண் மற்றும் கலவை வெளியேராததை உறுதி செய்து கொள்ளவும். இப்போது கலவையை ஈரமாக்கிஉங்களின் பிரியமான உணவின் விதையோ, செடியோ நட்டு வைத்து அது நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளருவதை கண்டு களியுங்கள்.

8.என்ன விதமான தொட்டிகள் உபயோக படுத்தலாம்?

இந்த அளவு, வடிவம், பொருள் என்று ஒன்றுமே கிடையாது. அதனால் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம், செராமிக் எந்த பொருளில் செய்திருந்தாலும் பிரச்சனை இல்லை. நீங்கள் இயற்கையை பேணும் ஆவல் உடையவரா? இன்னும் சிறப்பாக உபயோகபடுத்தி தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் (கோலா, தண்ணீர்), பேக்கரிகளில் கொடுக்கும் தெர்மோகோல் டப்பாக்கள்,சாக்ஸ், தேங்காய் ஓடுகள், உடைந்த வாளி, நசுங்கிய வீட்டு பொருள்கள், இதற்கு மேலே உங்களின் கற்பனைக்கே!!

9. என்ன என்ன செடிகள் வைக்கலாம்?

நமது சமையலுக்கு தேவையானவற்றிலிருந்து துவங்கலாம். தனியா, வெந்தயம், கடலை, மிளகாய் இவை வெறும் விதைகளிலேயே சீக்கிரம் வளர்ந்து நம்மை பெருமை கொள்ள செய்யும். ஓரளவு பழகியவுடன் சிறிது நம்பிக்கை வந்தவுடன் நமக்கு பிடித்த காய்கறி செடிகள் (கத்திரி, எலுமிச்சை,முறுங்கை, வெண்டை, தக்காளி, ) பழங்கள் (வாழை, மாதுளை) போன்றவற்றை பயிர் செய்யலாம். இந்த காய்கள் வருடத்தில் எல்லா நாட்களிலும் விளையும் என்பது கூடுதல் நன்மை.

10. எவ்வளவு காய்கறி/பழங்கள் என் தோட்டத்திலிருந்து கிடைக்கும்?

1X1 மாடியில் இருந்து ஒரு வருடத்திற்கு சுமார் ஆறு வகை காய்கள் 25 முதல் 50 கிலோவரை பெறலாம். விவசாய அனுபவம் இதற்கு அவசியமா? இல்லை...உங்களுக்கு அவசியமாக இருக்க வேண்டியது ஆர்வம் மட்டுமே!!! கைகளை கழுவ அலுப்பும் படாமல் இருக்க வேண்டும்.

11. இதனால் என்ன பயன்?

1) நமது நேரத்தை பயனுள்ளதாக ஆக்கும் அன்பளிப்புடன்...
2) நமது வீட்டின் சூட்டை ஆறு முதல் எட்டு டிகிரி குறைப்பதால் இயற்கை ஏசியாக செயல்படுகிறது.
3) கட்டிடத்தை வெயில் மற்றும் குளிர் இரண்டிலிருந்தும் தனிபடுத்தி காக்கின்றது. 4) கெமிக்கல் இல்லாத சத்தான, புதிய உணவை தருகின்றது.
5) நமது உடலுக்கு நல்ல பயிற்சியாக அமைந்து வலுவாக்கின்றது.
6) சுத்தமான காற்றை தருகின்றது.
7) சத்தத்தால் ஏற்படும் பாதிப்பையும் குறைத்து அழிந்து போகும் குருவிகள் இனத்திற்கு வீடு கொடுத்து நமக்கு புண்ணியமும் தருகின்றது. இதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்?புதிதாக தொடங்க ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் தேவை படலாம். செடிகள் நட்டு வளர ஆரம்பிக்க ஒரு மாதம் பிடிக்கும். டரஸ் கார்டனை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்? நமது தோட்டத்தில் செடிகள் வளர ஆரம்பித்தவுடன் ஒரு நாளுக்கு ஒரு மனி நேரம் செலவிட்டாலே போதும். அதுவும் அதிலேயே உடற்பயிற்சி, சுவாச பயிற்சி(சுத்தமான காற்றுடன்) எல்லாம் அடங்கி விடும்.

12. ஒரு தோட்டத்திற்கான செலவு எவ்வளவு?

சுமாரக 5௦௦௦ ருபாய் செலவு செய்தால் தோட்டம் போடலாம். அதில் விதைகள், செடிகள், உரம், நுண்ணுட்ட சத்து, செரிவுட்டபட்ட மண், தொட்டிகள், எல்லாம் அடங்கும். ஆனால் முன்புகூறியது போல் உபயோகம் இல்லாத பொருள்களை எடுத்து கொண்டால் செலவு குறையும். கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து படிபடியாய் பெரிதாக்கி கொள்வதும் நல்லது. உங்களது உழைப்பில் உருவாகும் செடிகளை பார்க்கும் போது கிடைக்கும் சந்தோஷம் உங்கள் செலவை எண்ணி பெருமை கொள்ள வைக்கும். நிச்சயமாக உங்களின் செலவையும், உழைப்பையும் விட அதிகமான பலன்களையே இந்த பச்சை செல்வம் கொடுக்கும்.

13. பூச்சிகொல்லிகள் தேவைப்படுமா?

பூச்சிகளிடமிருந்து காக்க நமது அடுப்பங்கரை குப்பையிலிருந்து செய்யும் உரமும், பஞ்ச கவ்யம் எனப்படும் மருந்துமே போதும்.(பஞ்ச கவ்யம் தயாரிப்பு தனியாக உள்ளது)

14. வீட்டுசெடிகளைக் காக்கும்முறை ?

பொதுவாகக் குளிர் காலத்தில் செடிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டால் போதும். வாரம் ஒரு முறையேனும் செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.மனிதனுக்கு நடைப்பயிற்சி போலக் கொத்திவிடுவதை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்ய வேண்டும். இதனைச் செய்யாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவதால் பயன் ஒன்றும் இல்லை.செடிகளைக் காக்கும் வேப்பம்இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை அனைத்து வகைச் செடிகளிலும் தெளிக்க வேண்டும்.வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும். வளர்ந்த ஒரு வயது செடிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயற்கை உரம் ஒரு பிடி போட வேண்டும்.இரண்டு வயது செடிகளுக்கு இரண்டு மடங்கு உரம் தேவை. இதே போலத்தான் தொட்டிச் செடிகளுக்கும் உரமிட்டுப் பராமரிக்க வேண்டும்.இதனால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

15. வீட்டுக்குள் செடிப் பராமரிப்பு?

வீட்டுக்குள் (இண்டோர் பிளாண்ட்) வளர்க்கப்படும் செடிகளுக்குக் குறைவாகவே தண்ணீர் விட வேண்டும்.இச்செடிகளுக்குத் தண்ணீரை ஸ்பிரே செய்தால்கூடப் போதும். அதுகூட அச்செடிகளின் இலைகளில் உள்ளத் தூசியை நீக்குவதற்காகத்தான். வாரம் ஒரு முறை மிதமான சூரிய ஒளிபடுமாறு பால்கனியிலேயோ, வீட்டின் வெளியிலேயோ வைக்கலாம். இதற்கு முன் செடியின் அடி மண்ணைக் கிளறிக் கொத்தி விடவேண்டும். இதுவே தண்டுச் செடிகளாக இருந்தால், தண்டின் அடி  மட்டுமே தண்ணீர் விட வேண்டும்

16. காய்கறி தோட்டம் என் வீட்டில் ரெடி ?

என் வீட்டு மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளேன் . செடி வளர உபயோகம் செய்த கலவை- மண்புழு உரம் + மக்கிய தென்னை நரர் கழிவு + செம்மண் + மணல் .கத்தரி , தக்காளி மிளகாய் கீரை முதலியவை, அதன் வளர்ச்சியை தெரிவிக்கிறேன்..

17. செடிகளை எங்கு வைக்கலாம்?

பால்கனிகளில், மொட்டைமாடிகளில், ஏன்.. ஜன்னல் விளிம்புகளில் கூட தொட்டிகளைவைத்து, செடிகளை வளர்க்கலாம். அதுக்குன்னு ஓவல் வடிவமைப்புள்ள தொட்டிகளும் கிடைக்குது. சிலவீடுகளில் அடுக்களையில் ரெண்டு சுவர்கள் சேரும் மூலைகளில் மார்பிள், கடப்பா போன்ற கற்களை ஷெல்புமாதிரி பதிச்சு, அதுல கனமில்லாத தொட்டிகளை . கொத்தமல்லி, வெந்தயம், அரைக்கீரை வகைகளை அதுல வளர்க்கும்போது அழகான உள்அலங்காரமாவும் இருக்கும் 12. கேன்கள், பாட்டில்கள், மற்றும் டப்பாக்களை அதன் குறுகிய வாய்ப்புறத்திலிருந்து கொஞ்சம் கீழிறக்கி வெட்டிக்கிட்டா, பூந்தொட்டி ரெடி. இதுல மண்ணை நிரப்பி தொட்டியின் அளவுக்கேற்ப சின்ன மற்றும் பெரிய செடிகளை நடலாம். பெரிய சைஸ் டப்பாக்களில், காய்கறிகள், கறிவேப்பிலை போன்றவற்றை நடலாம். சின்ன அளவுல வளர்ற ரோஜாக்கள், புதினா கொத்தமல்லி, அலங்காரப்பூச்செடிகளுக்கு குளிர்பான பாட்டில்களே போதுமானது. வீட்ல இருக்கற பசங்ககிட்ட செடிகளை பராமரிக்கிற பொறுப்பை கொடுத்துப்பாருங்க. "நானே வளர்த்ததாக்கும்ங்கற" பெருமையில பிடிக்காத காய்கறிகளும்கூட பிடிச்சுப்போக ஆரம்பிச்சுடும். எங்கவீட்ல வெண்டைக ்காய் காய்ச்சுக்கிடந்தப்ப, பசங்க அதை பச்சையாவே சாப்பிடுவாங்க :-))வீட்டில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது , பூ, காய்கறிகளை குழந்தைகளை பறிக்க வைப்பது என்பது நல்லதொரு பழக்கம்.
* வேம்பு, கொய்யா, மாதுளம்பழம் போன்ற மரங்களை உங்கள் வீட்டைச் சுற்றிலும் வளர்த்து வந்தால் பிற்காலத்தில் அவற்றால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
* சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் கிடைக்கின்றன.
* நீங்களே வளர்த்த தாவரங்கள் என்பதால், அதனால் உண்டாகும் பலன்கள் உங்களுக்கு பரமதிருப்தியைத் தருகிறது

18. மண் தான் பிரதானம் ஏன் ?

வீட்டுத் தோட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயமே மண்தான். கண்ட இடத்துல மண்ணைஅள்ளிட்டு வந்து போடக்கூடாது. செம்மண்ணும், மணலும் கலந்த கலவையோடு எலும்புத் தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம்பிண்ணாக்கு எல்லாத்தையும் கலந்துதொட்டியில் போட்டிருக்கதால நல்ல இயற்கை உரமா இருக்கு.

19. பொன்னாங்கண்ணி கீரை..........?

நிறைய சத்துள்ள ஒரு கீரையாக பொன்னாங்கண்ணி கீரையை சொல்லலாம். கண் பார்வைக்கு ரொம்ப நல்ல கீரை. பச்சையும், முழு பிங்க் நிறத்திலும் இந்த கீரை வரும். செடியில் இருந்து பறித்த கீரையில் இருந்து ஒரு குச்சியை வைத்தால் வளர்ந்து விடும். வேண்டும் போது தேவையான அளவு வெட்டி எடுத்துக் கொள்ளலாம். பிறகு தளிர் விட்டு வளர்ந்து விடும்.  பொன்னாங்கண்ணி கீரையில் பூச்சி அரிப்பு வந்து இலையில் சின்ன சின்னதாய் ஓட்டை விழும். தண்ணீர் விடும் போது வேகமாக நீரை செடி மீது பீச்சி அடிப்பதன் மூலம் அந்த பிரச்சினை கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது.

20. கொத்தமல்லி...........?

புதினா மாதிரி மல்லியும் நிறைய மருத்துவ குணம் கொண்டது. கொத்தமல்லியை நாம் கீரையாக அவ்வளவு பயன்படுத்துவது கிடையாது. கொத்தமல்லியில் சட்னி, சாதம் செய்யலாம். கிச்சனில் இருக்கும் முழு மல்லியில் இருந்து கொஞ்சமாய் எடுத்து தூவி விட்டால் போதும். வளர்ந்து விடும். நன்றாக வளர்ந்ததும் பிடுங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். பூப்பதற்கு முன் பறிப்பது நல்லது. கொத்தமல்லி இந்த செடி வைப்பதற்கு, மரப்பெட்டியில் மண்ணை நிரப்பி, 1/4 இன்ச் ஆழத்தில் மல்லி விதையை, சரியான இடைவெளியில் வரிசையாக விதைத்து, தண்ணீர் ஊற்றி, போதிய சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.

21. வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகள் எவை?

அலமாண்டா, ஆண்டிகோனான், அரிஸ்டோலோகியா, மனோரஞ்சிதம், ஆஸ்பராகஸ், பிக்னோனியா, காகிதப்பூ, பெரண்டை, கிளி மாட்டிஸ் சங்கு புஷ்பம், பைகஸ் ஐவி போன்ற செடிகள் வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகளாகும் செம்பருத்தி செடி தோட்டத்தில் வருடம் முழுவதும் பூக்களைத் தரக்கூடியவாறான செடியை வைப்பதற்கு ஆசைப்பட்டால், அதற்கு செம்பருத்தி செடி சரியானதாக இருக்கும். செம்பருத்தி செடியை பராமரிப்பது என்பது மிகவும் ஈஸியானது. அனைவருக்கும் செம்பருத்தியில் உள்ள வெரைட்டிகள் தெரியுமோ இல்லையோ, ஆனால் அந்த செம்பருத்தி கண்ணைப் பறிக்கக்கூடிய வகையில் பல்வேறு நிறங்களில் உள்ளது. மேலும் அவை அனைத்தும் ஒரே மாதிரி இல்லாமல், சில செம்பருத்தி பூக்கள் வடிவம் மற்றும் அளவுகளில் மாறுபட்டிருக்கும். குறிப்பாக இந்த செம்பருத்தி செடியில் உள்ள ஒரு தனித்துவம் என்னவென்றால், அந்த பூவானது செடியின் இலைகளை பல்வேறு காலங்களில் ஒரே மாதிரி வைத்திருக்கும்

22. செடி,கொடி,மரம் வளர்ப்பவர்களுக்கான டிப்ஸ்?

1. செடிகளுக்கு விடப்படும் தண்ணீர் மிகவும் உப்பு தண்ணீராக இருக்க கூடாது.

2. தொட்டிகளில் செடியை வளர்ப்பவர்கள் குறிப்பாக ஒன்று முதல் ஒன்றரை அடி ஆழமன சிமென்டு தொடிகளை பயன் படுத்தினால் திரும்ப திரும்ப செடிகளை நடுவதற்கு வசதியாக இருக்கும். தொட்டிகளில் செம்மண், மணல், கார்டன்ப்ளூம் உரத்தை கலக்கவும்.

3. செடிகளுக்கு காலையிலும், மாலையிலும் தண்ணீர் விடவும். இயற்கை உரங்களைப் போடு வளர்க்கப்படும் செடிகளில் வளரும் காய்கள், சுவையாக இருப்பதோடு உடல் எஅலத்திற்கும் மிகநல்லவை

4. தக்காளி, வெண்டை, பசை மிளகாய் போன்ற காய்கறி செடிகளுக்கு டீத்தூள், முட்டை ஓடு,மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம் 7. அவரை கொடி பூக்காமல் இருந்தால் இலைகலை இடையிடையே உருவி எடுத்து விட்டால்பூக்கள் பூத்து காய்கள் காய்க்கத்தொடங்கும்

5. கருவேப்பிலை செடி காய்ந்து விட்டால் அந்த இடத்தை பறித்து விட்டால் உடனே துளி விட்டு படர்ந்து வளரும்

6. எழுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போட்டால் செழித்து வளரும் காயும் காய்த்து விடும்.

7.வீட்டுத் தோட்டத்தில் கொய்யா, மா, சப்போட்டா இருந்தால் முதல் இரண்டு வருடம் பூக்கும் பூக்களை உருவி விட்டல் பின்னல் நன்றக காய்க்கும்

23. வீட்டிலிருந்து கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட்டி எப்படி?

ஓர் அடி அகலம் மற்றும் உயரமுள்ள தொட்டியில், சமைக்கப்படாத கழிவுகளைப் போட்டு, புளித்தத் தயிரை தண்ணீரில் கலந்து தெளித்தால்... கழிவுகள் மட்க ஆரம்பித்து, ஒரு மாதத்தில் எரு தயாராகி விடும். பிளாஸ்டிக் பொருட்கள், அசைவக் கழிவுகளை பயன்படுத்தக் கூடாது. மரங்களிருந்து விழும் இலை மற்றும் தழைகள், பூஜைக்குப் பயன்படுத்திய பூக்கள்... என வீட்டில் கிடைக்கும் பெரும்பாலான கழிவுகளையும் லாமபயன்ப. ஓர் அடி ஆழம் மற்றும் அகலத்துக்கு குழியைத் தோண்டி, கிடைக்கும் மண்ணை, குழியைச் சுற்றி அணைபோல் கட்ட வேண்டும். பிறகு, குழிக்குள் கழிவுகளைப் போடவேண்டும். குழியைச் சுற்றி இருக்கும் மண் மீது வெண்டை, கத்திரி, தக்காளி போன்றவற்றை நடலாம். குழியில் கழிவுகளைக் கொட்டி புளித்தத் தயிரைத் தெளித்து வந்தால் போதும். அந்த ஊட்டத்தை எடுத்துக் கொண்டு, செடிகள் வளர்ந்து காய்கள் கிடைத்துவிடும். தினமும் கிடைக்கும் கழிவுகளின் அளவுக்கு ஏற்ப, ஒன்றுக்கும் மேற்பட்ட குழிகளை அமைத்துக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ அளவுக்கு வாழை மற்றும் திராட்சை போன்ற பழங்களின் கழிவுகள் மற்றும் ஒரு கிலோ வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி, 5 லிட்டர் தண்ணீரை ஊற்றி பதினைந்து நாட்கள் வைத்துவிட வேண்டும். பிறகு, அருமையான டானிக் கிடைக்கும். இதைச் செடிகளுக்குத் தெளித்தால்,அருமையாக வளரும். ஒரு சிறிய வீட்டின் மாடியில் 30 செடிகள் வரையில் வளர்க்க முடியும்.Growbagல் முழுக்க முழுக்க கோகோபிட் மட்டும் போட்டு, சிறிது இயற்கை உரம் சேர்த்து பயிரிடலாம்.அல்லது செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, மக்கு உரம் 1 பங்கு கலந்து பயிர் செய்யலாம். மாடியில ்அமைக்கும்தொட்டத்திற்கு cocopeat தான் நல்லது. இதில் அதிக எடை இருக்காது. அதேபோ growbagலிருந்து வெளியேறும் நீர் தளத்தை பாதிக்காமல் இருக்க geotextile material பயன்படுத்தலாம்.

24. How to use the neem oil for controlling pests and insects in home garden ?

Neem  oil is highly recommended for controlling pest caused by insects and diseases caused by fungi  inorganic farming. Neem oil about 3 to 5 ml can be mixed with one liter of water . You have to add soap solution 10ml to make oil thoroughly mix in water. You will get milky white solution which can be sprayed on leaves in the evening time. This may be repeatedad at  weekly intervals monitoring  pest and disease surveillance .High concentration may develop scorching of leaves.This solution is safe to human health too.

25. Every time I tried growing vegetables in pots in my balcony they become fested with pests if different types. The white fly being a usual trouble maker. I have never been able to get a good yield of vegetables due to this. My papaya plant got attacked by spider mites and my curry leaf by citrus canker. What should I do?

It is very common to get these type of problems for which you have to know some homemade solutions to maintain the plants. Neem  oil is highly recommended for controlling pest caused by insects and diseases caused by fungi  inorganic farming. Neem oil about 3 to 5 ml can be mixed with one litre of water . You have to add soap solution 10ml to make oil thoroughly mix in water. You will get milky white solution which can be sprayed on leaves in the evening time. This may be repeated  at  weekly intervals monitoring  pest and disease surveillance .High concentration may develop scorching of leaves. This solution is safe to human health too. One litre Buttermilk kept for 7 days mixed with azofoetida 10gmssolution is also a good remedy for most of fungal diseases and as well pests.

Post ur questions: